தூத்துக்குடியில் ரூ. 22 லட்சத்தில் மீன் ஏலக்கூடத்துக்கு அடிக்கல்

தூத்துக்குடியில் ரூ. 22 லட்சம் செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் ரூ. 22 லட்சம் செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தூத்துக்குடி வஉசி துறைமுகம் சென்ற அவர், அங்குள்ள சிறுவர் பூங்காவில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட  அம்பேத்கரின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, துறைமுக குடியிருப்பு பகுதியில் ரூ.2.84 கோடி மதிப்பில் 866.16 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அந்த வணிக வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பழைய  துறைமுகம் அருகே ரூ.80.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கும் அலுவலக அறை கட்டுவதற்கும் வஉசி துறைமுகம் சார்பில் ரூ. 17. 42 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
இதையடுத்து, திரேஸ்புரம் முத்தரையர் காலனியில் ரூ. 22 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள மீன்வலை பின்னும் கூடம் மற்றும் மீன் ஏலக் கூடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மீனவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார், துணைத் தலைவர் சு. நடராஜன், குமரி துறைமுக சிறப்பு அதிகாரி விஷ்ணு, துறைமுக சபை உறுப்பினர் ராஜகண்ணன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com