கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி அருகேயுள்ள கவர்னகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி அருகேயுள்ள கவர்னகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கத்தின் 248 ஆவது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி மாவட்டம்,  ஒட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு வீரன் சுந்தரலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
 சமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ. 25 ஆயிரம் நிதியுதவியும், 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம்,  சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும்  இறப்பு உதவித்தொகை ரூ.10.15 லட்சத்துக்கான காசோலை, 14 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 22 ஆயிரம்  மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம்  110 பயனாளிகளுக்கு ரூ.28.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வழங்கினார்.
 நிகழ்ச்சியில், வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் சி. பொன்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாச்சியர் பி. அனிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் கு. தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் டி. ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஞானராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் என். சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com