மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்

கோவில்பட்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5  லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து வருவாய்த் துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். 

கோவில்பட்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5  லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து வருவாய்த் துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். 
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அரிக்கண்ணன்,  இசக்கிராஜா ஆகியோர் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளையரசனேந்தல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது விருதுநகர் மாவட்டம்,  திருச்சுழியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. 
அதையடுத்து 5 லாரி ஓட்டுநர்களான மருதூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த ச.முருகேசன்(28), திருமால்கோயில்நாதபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கொ.அடைக்கலம்(27), அப்பனேரி இந்திரா காலனியைச் சேர்ந்த சு.வேலுச்சாமி (38),  மதுரை கோபிநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ச.ராஜ்குமார் (30),  அய்யனேரியைச் சேர்ந்த க.முருகன்(44)  ஆகியோர் ஓட்டி வந்த 5    லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை  வருவாய்த் துறையினர் வசம் ஒப்படைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com