"தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-18ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர்களுக்காக  நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் திட்டங்கள், தொழில்முனைவோர் திட்டம்,  இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு மற்றும் கிளினிக் அமைத்தல் திட்டம்,  சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும்  பொருளாதார கடனுதவி திட்டம், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்த இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் அல்லது மனுநீதிநாளில் மனு வழங்க வேண்டும்.  
மற்ற திட்டங்களுக்கு உரிய சான்றுகளுடன் H​T​T​P://​A​P​PL​I​C​A​T​I​O​N.​T​A​H​D​C​O.​C​OM என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து ஆதிதிராவிடராகவும், 18 வயது நிரம்பிய 65 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 3ஆம் தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101 என்ற முகவரியில் நேரில் அணுகி பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com