கந்தக அமிலம் இறக்குமதி: தூத்துக்குடி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் முதல் முறையாக கந்தக அமிலத்தை இறக்குமதி செய்து சாதனை புரிந்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் முதல் முறையாக கந்தக அமிலத்தை இறக்குமதி செய்து சாதனை புரிந்துள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஐ. ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 18,965 மெட்ரிக் டன் கந்தக அமிலத்துடன் 9.7 மீட்டர் ஆழமுடைய எம்.வி அமி என்ற கப்பல் முதன் முதலாக துறைமுகத்திற்கு வந்துள்ளது. கிரீன் ஸ்டார் உர நிறுவனத்தினர் கந்தக அமிலத்தை இறக்குமதி செய்துள்ளனர்.
இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com