கொட்டங்காடு கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

உடன்குடி அருகே கொட்டங்காடு வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் மாதாந்திர வழிபாடு, மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி அருகே கொட்டங்காடு வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் மாதாந்திர வழிபாடு, மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 6 மணிக்கு அம்மன்,விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. 
இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு அம்மன் உள்பிரகார சப்பர பவனி, 11 மணிக்கு ஊஞ்சல் சேவையைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பி.சுந்தரஈசன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com