கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்க 31ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்க 31ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
சங்கத் தலைவர் போ.அய்யலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ராஜாமணி,  பிச்சையா, இணைச் செயலர் கோபாலகிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச் சங்க உதவிப் பொதுச் செயலர் எஸ்.அருணாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
75 மற்றும் 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் சங்கரநாராயணன் கெளரவித்தார். சங்கச் செயலர் கேசவன் ஆண்டறிக்கையையும், பொருளாளர் ராசையா வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர். 
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்க அமைப்புச் செயலர் சண்முகசுந்தரராஜ், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் சேவியர் லியோனிதாஸ் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் ஓய்வூதியம் நிர்ணயம், குறைந்தபட்ச ஓய்வூதியம், மருத்துவப்படி மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களும் அமல்படுத்த வேண்டும். 
குறைந்தபட்ச ஊதியம் 50 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்றோர் நல வாரியம் அமைத்து ஓய்வு பெற்றோர் நலம் காத்திட மாவட்டந்தோறும் அரசு அலுவலர்கள் நல இல்லம் அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்,  ஓய்வூதியர்களின் தந்தை டி.எஸ்.நகராவை நினைவுகூரும் வகையில், அவரது உருவம் பதித்த நாணயங்கள்,  அஞ்சல் தலைகள் வெளியிட மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
சங்க செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் வரவேற்றார். இணைச் செயலர் சுப்புராம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com