மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில்,  ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 517 மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை (சமூகப் பாதுகாப்புத் திட்டம்),  ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் 717 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் 708 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 9 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 236 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
முகாமில்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சித் துறை) பழனி,  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன்,  வட்டாட்சியர் முருகானந்தம்,  சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பாக்கியலட்சுமி,  மாவட்ட ஊராட்சி செயலர் முகம்மதுநசீர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,  நாகராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com