ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரவருணி நதியை சீரமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி நதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி நதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
அப்போது ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீவைகுண்டம்  அணைக்கட்டின் கீழ்பகுதியிலுள்ள இடங்கள் சீரமைக்கப்பட்டு  அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் பொதுமக்கள் காணும் பொங்கல் அன்று வந்து செல்ல ஏதுவாக மின்விளக்குகள்  அமைக்கப்பட உள்ளன. இந்த இடத்தை பொதுமக்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும்,  பிளாஸ்டிக் குப்பைகள் சேராத வகையில் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். வருங்காலங்களில் தாமிரவருணி நதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
ஆய்வின்போது,  சார் - ஆட்சியர் பிரசாந்த்,  வட்டாட்சியர் தாமஸ்பயஸ்  அருள்,  பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழிசெல்வன் ரங்கசாமி,  மண்டலத் துணை வட்டாட்சியர்கள் ஜஸ்டின்,  முருகேசன்,  வருவாய்  ஆய்வாளர்கள் அய்யனார், பாண்டியராஜன், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி,  கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன்,  தனி அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com