பேருந்தில் ஆசிரியையிடம் பணம் திருட்டு
By DIN | Published on : 14th January 2018 03:53 AM | அ+அ அ- |
திருச்செந்தூரில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியையிடம் ரூ. 38 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் தெற்கு அமிர்தவிளை மேலத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ரோஸ்லின் அன்னலீலா (48). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை திருச்செந்தூரில் எல்.ஐ.சி.யில் பணம் செலுத்துவதற்காக சாத்தான்குளத்திலிருந்து அரசுப் பேருந்தில் திருச்செந்தூர் வந்துள்ளார். பின்னர் எல்.ஐ.சி. அலுவலகம் சென்று தன் கைப்பையில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது ரூ. 38,350-ஐ காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.