விவேகானந்தர் பிறந்த நாள்: 156 பேருக்கு தென்னங்கன்றுகள் அளிப்பு
By DIN | Published on : 14th January 2018 03:52 AM | அ+அ அ- |
சுவாமி விவேகானந்தரின் 156ஆவது பிறந்தநாளையொட்டி, பாஜக சார்பில் பரமன்குறிச்சியில் 156 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டச் செயலரும், திருச்செந்தூர் பேரவைத் தொகுதி அமைப்பாளருமான இரா.சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்து 156 பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். பாஜக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் லங்காபதி, உடன்குடி ஒன்றிய பொதுச் செயலர் சிவந்திவேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் மெய்யழகன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவர் சதீஷ் வரவேற்றார்.
இதில், பாஜக நிர்வாகிகள் பழையமுத்து, கணேசன், ராகுல்ராஜ், மகளிரணி கீதா, வளையக்கா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் சங்கரகுமார் ஐயன் நன்றி கூறினார்.