கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் தலைமை வகித்தார்.  செயலர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். மாணவி நாகேஸ்வரி மன்ற அறிக்கையை வாசித்தார்.  கோவில்பட்டி ஸ்ரீ முத்தானந்த சுவாமி மடத்தின் மடாதிபதி தவத்திரு சொரூபானந்த சுவாமிகள் ஆன்மிகம் என்ற தலைப்பிலும், நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியை  லதா அறிவியலும், ஆன்மிகமும் என்ற தலைப்பிலும் பேசினர். 
 தொடர்ந்து, கடந்த முழு ஆண்டுத் தேர்வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி பொருளாளர் சண்முகராஜா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, செல்வராஜ், செளந்திரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவி மகாலட்சுமி வரவேற்றார். லாவண்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளிச் செயலர் ரமேஷ் தலைமையில், தலைமையாசிரியர் வடிவேல் மற்றும் அறிவியல் மன்ற ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com