போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் திங்கள்கிழம நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் திங்கள்கிழம நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  இக் கல்லூரியில் காமராஜரின் 116 ஆவது பிறந்த நாள் விழா  கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில்,  அமைச்சர் கடம்பூர் செ. ராஜு  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் பாண்டியம்மாள்,  உதவி இயக்குநர் மயிலம்மாள், கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ப. செந்தூர்பாண்டி, வணிகவியல் துறைத் தலைவர் கு. காசிராஜன், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் ஆ. தேவராஜ், கல்லூரி கல்விக்குழு உறுப்பினர்கள் முத்துசெல்வம், ஆனந்தராஜ், மகேந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com