காயல்பட்டினத்தில் நுண் உர செயலாக்க மையம் மூலம் உரம் விற்பனை

காயல்பட்டினம் நகராட்சி சார்பில் நகரில் சேரும் குப்பைகளை உரமாக்கிட, நுண் உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகராட்சி சார்பில் நகரில் சேரும் குப்பைகளை உரமாக்கிட, நுண் உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி சார்பில், நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு விவசாயத்திற்குத் தேவையான உரம் தயாரிக்கும் நுண் உரம் செயலாக்க மையம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவன் கோயில் தெரு பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் வலசை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரம், நகராட்சியால் கிலோ ரூ. 10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. உர அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க நிகழ்ச்சி காயல்பட்டினம் அம்மா உணவக வளாகத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ப்ரேம் அனந்த், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர், நுண் உரம் செயலாக்க மையம் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com