தச்சமொழி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை மற்றும் ஸ்ரீபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கந்தசஷ்டி தொடக்க நிகழ்ச்சியாக  பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்கினர். 
தொடர்ந்து கோயிலில் நவ.13ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், யாக சாலை பூஜை மற்றும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கந்தசஷ்டி நிறைவு நாளான நவ. 14ஆம் தேதி  மாலையில் கோயில் வளாகத்தில் ஸ்ரீமுருகன் - ஸ்ரீவள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை  கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com