வாழ்விடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமானால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், தொற்றா நோய் தடுப்புப் பணிகள் குறித்து,  தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துத் துறை அலுவலர்களால் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் கல்வி நிறுவனத்தினர் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
மேலும், தங்கள் நிறுவனத்திலுள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கழிவு நீர் கால்வாய்களில் தேங்கும் குப்பைகளை அகற்றி, மூடிவைக்க வேண்டும். பள்ளியின் அனைத்து கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் போதிய ஆக்சிஜன் உருளை, மின் ஆக்கி (ஜெனரேட்டர்), டீசல் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள்  டீசல், பெட்ரோலை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்கள் தடையின்றி தொலைபேசி சேவையை வழங்க வேண்டும். 
டெங்கு கொசு அதிகமாக உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் மக்கள் தங்கள் பகுதியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, பயன்படுத்தாத பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியாகும் வகையில் பொருள்களை சேமித்து வைத்திருந்தால் சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பரிதா செரின், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் துறை அலுவலர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com