இலவச தையல் பயிற்சி முகாம்

கோவில்பட்டியையடுத்த மேலப்பாண்டவர்மங்கலத்தில் இலவச தையல் பியற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

கோவில்பட்டியையடுத்த மேலப்பாண்டவர்மங்கலத்தில் இலவச தையல் பியற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இந்திய அரசு நேரு இளையோர் மையம் - கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றம் இணைந்து நடத்திய இம்முகாம் மேலப்பாண்டவர்மங்கலத்தில் உள்ள தையல் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முகாமிற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நேரு இளையோர் மைய துணை இயக்குநர் சடாச்சரவேல் தலைமை வகித்து,  பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து பேசினார்.
ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, சமூக தணிக்கை வட்டார அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்றுநர் முருகலட்சுமி, காந்திஜி மகளிர் மன்றச் செயலர் மாரியம்மாள், மன்ற உறுப்பினர்கள் கற்பகவள்ளி, அழகுசித்ரா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
மன்ற ஆலோசகர் விஜயன் வரவேற்றார். நேரு இளையோர் மைய சேவை தொண்டர் நிஷா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com