தாமிரவருணி மகா புஷ்கர விழா படித்துறைகளை பார்வையிட்டார் செங்கோல் ஆதீனம்

தாமிரவருணி  மகா புஷ்கர விழா நடைபெறவுள்ள சேர்ந்தபூமங்கலம் படித்துறை உள்பட பல்வேறு பகுதிகளை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பார்வையிட்டார்.

தாமிரவருணி  மகா புஷ்கர விழா நடைபெறவுள்ள சேர்ந்தபூமங்கலம் படித்துறை உள்பட பல்வேறு பகுதிகளை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பார்வையிட்டார்.
தாமிரவருணி மகா புஷ்கர பெருவிழா வரும் அக்டோபர் நடைபெறவுள்ளது. 
இந்நிலையில், சேர்ந்தபூமங்கலம், சொக்கப்பழங்கரை, சேதுக்குவாய்த்தான் ஆகிய கிராமங்களி லுள்ள தாமிரவருணி ஆற்று படித்துறைகளை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகா சன்னிதானம் சத்ய ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
முன்னதாக, அந்தந்தப் பகுதி தாமிரவருணி மகா புஷ்கர விழா பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். மகா புஷ்கர பெருவிழா குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ஆறுமுகம், இணை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உள்பட பலர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருதநாயகம், சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், ஆறுமுகநயினார், மகராஜன், அன்னபூரணி உள்பட பலர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com