ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

ஓட்டப்பிடாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன 

ஓட்டப்பிடாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன 
தூத்துக்குடி மாவட்ட சமூக நலம் மற்றும் சத்தணவு திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். 
விழாவில் கலந்துகொண்ட 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு வழங்கினார். மேலும், கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட விநாடி- வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கோட்டாட்சியர் விஜயா வழங்கினார். 
விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வே. திலகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் வே. தேவிகா, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் காளிராஜ், ஓட்டப்பிடாரம் ஆணையர் நவநீதகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலவலர் இசக்கியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாய நலக் கூடத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 35 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. 
ஈராச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமாசெல்வி தலைமை வகித்தார். கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புஷ்பா முன்னிலை வகித்தார். விழாவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 35  கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது.  இதில், கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சாந்தி செய்திருந்தார்.
நட்டாத்தி அருகே...
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கொம்புகாரன் பொட்டலில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.  பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆஷா சண்முகநாதன் தலைமை வகித்தார்.   குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் ஜெயா முன்னிலை வகித்தார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கர்ப்பிணிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். 
ஆழ்வார்திருநகரி முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜ்நாராயணன், நட்டாத்தி முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், செம்பூர் விவசாய சங்க பிரதிநிதி நயினார், பண்டாரவிளை பால்துரை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com