கோவில்பட்டியில் அரசு  ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு  ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்  நடைபெற்றது. 

கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு  ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்  நடைபெற்றது. 
 தலைவர் போ. அய்யலுசாமி தலைமை வகித்தார். செயலர் கேசவன் கூட்டறிக்கையையும், பொருளாளர் ராசையா வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  தொடர்ந்து,  கண் மருத்துவர் அணில்குமார் ஓய்வூதியர்களுக்கு கண் பரிசோதனைகள் செய்து, கண்ணை சிறப்பாக பேண வேண்டிய அவசியம் குறித்தும், மருத்துவக் காப்பீடு குறித்தும் விளக்கினார்.  கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். மருத்துவப்படி ரூ. 1000-மாக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  உறுப்பினர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இணைச் செயலர் சுப்புராம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com