கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகள்

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக தினமும் ரூ. 4  லட்சம் வருமானம் ஈட்டக்கூடிய நிலையில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நெல்லை - தாம்பரம் முன்பதிவற்ற அந்தியோதயா ரயில் மற்றும் வெள்ளிக்கிழமைதோறும் செல்லும் நாகர்கோவில் - சென்னை வாராந்திர விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன் தலைமை வகித்தார்.  அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் ராஜசேகரன், அமைப்பு சாரா அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சேதுரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், தொழிற்சங்கத்தினர், சமூக நல அமைப்பினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com