பொறியியல் மாணவர்கள் விரைவில் ஆய்வு

அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டலத்தின் முதல்வர் ஜி.சக்திநாதன் கூறியது:

அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டலத்தின் முதல்வர் ஜி.சக்திநாதன் கூறியது: கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் படித்துறைகள், கல்மண்டபங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. மருந்துகள் தயாரித்தல், விழாக்களை நடத்துதல் போன்றவற்றுக்கும் நதிக்கரை மண்டபங்களை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். பனங்கம்பு ஓட்டு வீடுகளில் அமைப்பது போல பொருத்தும் முறையில் (லாக் சிஸ்டம்) கல் மண்டபங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
சங்குமண்டபம், குறுக்குத்துறை, மருதூர்அணைக்கட்டு போன்றவை பொறியியல் மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்த்து கட்டடக் கலை தொழில்நுட்பங்களை மதிப்பிட வேண்டிய இடங்களாகும்.
தாமிரவருணி கரையோர மண்டபங்களை ஆய்வு செய்ய 42 மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து 10 நாள்கள் கணக்கெடுப்புப் பணிகளை செய்ய முடிவெடுத்தோம். ஆகஸ்ட் 17 ஆம் தேதியே இப் பணியைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்த காரணத்தால் ஆய்வுப் பணிகள் நடைபெறவில்லை. இப்போது புஷ்கர விழா நெருங்கி வருவதால் கால அவகாசம் போதுமானதாக இருக்காது. ஆகவே, புஷ்கர விழா முடிந்த பின்பு பெரிய அளவில் ஆய்வுப்பணிகளைச் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.
உழவாரப் பணிக்குழுவினர் முயற்சி 
திருநெல்வேலியைச் சேர்ந்த உழவாரப் பணிக்குழு நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் கூறியது: தாமிரவருணி கரையோர மண்டபங்கள் போதிய பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்து கிடைப்பது கவலையளிக்கிறது. விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கு மட்டுமன்றி தமிழர்களின் பாரம்பரிய கல்சிற்ப வேலைப்பாடுகள், கலைநயத்தை இளம்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் தாமிரவருணியில் மண்டபங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதனை பராமரிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.
எங்களது உழவாரப் பணிக்குழு சார்பில் இதுவரை மொத்தம் 27 நாள்கள் தாமிரவருணி கரையோர படித்துறைகள், கல்மண்டபங்களுக்காக செலவிட்டு பணி செய்துள்ளோம். 50-க்கும் மேற்பட்ட மண்டபங்களை சீரமைத்து வெள்ளையடிக்கும் பணியை செய்துள்ளோம். பொறியியல், தொல்லியல் அறிஞர் குழுவினர் ஆய்வு செய்து அரசு உதவியோடு சீரமைப்பு தொடங்கினால் இதைவிட வேகமாக முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com