மணப்பாட்டில் மகிமைப் பெருவிழா ஆராதனை

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் 439ஆவது மகிமைப் பெருவிழாவின் சிகர நிகழ்வான

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் 439ஆவது மகிமைப் பெருவிழாவின் சிகர நிகழ்வான பெருவிழா மாலை ஆராதனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பரந்து விரிந்த அழகிய மணப்பாடு கடற்கரையோரம் இயற்கையாக அமைந்த மணல்குன்றின் மேல் எழிலுடன் அமைந்துள்ளது திருச்சிலுவைத் திருத்தலம்.  இங்கு ஆண்டுதோறும் மகிமைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டில் 439ஆவது மகிமைப் பெருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தொடர்ந்து விழா நாள்களில் தினமும் காலை 6.30 மணிக்கு பல்வேறு சபையினர், பள்ளிகள் பங்கேற்ற திருப்பலி  நிகழ்ச்சி நடைபெற்றது.
செப்.13 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு மணப்பாடு மக்கள், திருப்பயணிகள் பங்கேற்ற திருப்பலி, ஐந்து திருக்காய சபை பொறுப்பாளர்கள் தேர்வு, மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. 
இதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். 
கோட்டாறு மறை மாவட்ட ஆயர் உபால்டு மறையுரை வழங்கினார். தொடர்ந்து திருத்தலத்தைச் சுற்றிலும் மெய்யான திருச்சிலுவை பவனி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (செப். 14) காலை 4 மணிக்கு பங்கு மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, 5 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி, 6 மணிக்கு திருத்தலத்தைச் சுற்றி ஐந்து திருக்காய சபையினர் பவனி பெருவிழா திருப்பலி ஆகியவை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு  ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை வகித்தார். 
பகல் 11 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவையை முக்தி செய்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜாண் கோஸ்தா, உதவி பங்குத்தந்தை மரிய சேவியர் ராஜா, திருத்தல ஆன்ம குரு தெயோபிலஸ் மற்றும் அருள் சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக் குழுவினர், இறைமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com