ஊழல் குறித்து பேச   திமுகவுக்கு தகுதியில்லை

ஊழல் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 

ஊழல் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கயத்தாறில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அவர் அளித்த பேட்டி:
ராஜீவ்காந்தி கொலையால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரே, இதில் தண்டிக்கப்பட்டுள்ள 7  பேரை விடுதலை செய்ய ஆட்சேபணை இல்லை என கூறியுள்ளனர். மற்றவர்கள் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், இப்போது ஆட்சேபணை சொல்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களது கருத்துகளும் கேட்கப்படும். 
கூட்டுறவு தேர்தலை 95 சதவீதம் வெற்றிகரமாக முடித்துவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி மன்றங்களின் அனைத்து வார்டுகளிலும் வார்டு வரண்முறை செய்ய காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் காலதாமதமாகிறது. அரசின் நிலைப்பாட்டில் எவ்வித தாமதமும் இல்லை. 
ஊழல் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை. ஊழல் செய்வது எப்படி என உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள். ஊழல் காரணமாக, 1976 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 2ஜி வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்போது அவர்களைப் பற்றி தெரியும் என்றார் அவர். 
பேட்டியின்போது, அதிமுக நகரச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com