அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும், ஏழை மக்களின் சுகாதாரத்தையும் உறுதி செய்ய முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் உயர் பட்டமேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
2018-2019 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும். 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பிற்கான மாணவர்கள் தேர்வு முறையை தமிழக அரசு எடுக்கும் முடிவிற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு கண் மருத்துவர் கொளஞ்சி தலைமை வகித்தார்.
ஜயங்கொண்டத்தில்... அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு மருத்துவகள் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் லட்சுமிதரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் செல்வமணி ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்தார்.
இதில், தா.பழூர் வட்டார தலைமை மருத்துவர் தட்சிணாமூர்த்தி, மருத்துவர்கள் மதியழகன், இளவரசன் மற்றும் ஆண்டிமடம், தா.பழூர், ஜயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்கேற்றனர். நிறைவாக, வரதராஜன்பேட்டை மருத்துவமனை மருத்துவர் கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com