அரசுத் தொழில் நுட்பத் தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 26 கடைசி நாள்

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு நடைபெறவுள்ள தொழில்நுட்ப தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு நடைபெறவுள்ள தொழில்நுட்ப தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந. மாரிமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையற் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்ப தேர்வில் தகுதியான தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று  இணையதளத்தில் வரும் 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ளவும். மேலும் அரசு தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் தங்களது விவரம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட சான்றிதழின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை வருவாய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு மையத்துக்கு சென்று, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சேவை மையங்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
தனியார் இணைய மையங்கள் மூலம் கண்டிப்பாக விண்ணப்பிக்கக் கூடாது. தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com