ஆசிரியர் தகுதித் தேர்வு: அரியலூரில் 3094 பேர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (முதல் தாள்) 3,094 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (முதல் தாள்) 3,094 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு (முதல் தாள்) சனிக்கிழமை நடைபெற்றது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பணியாற்றுவோருக்காக இந்த தேர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களில் 8 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள், நுழைவுச் சீட்டை பெற்றுக்கொண்டு, தேர்வறைக்கு சென்றனர். இத்தேர்விற்கு 3,191 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,094 பேர் மட்டுமே தேர்வு எழுத வருகை புரிந்தனர். மீதமுள்ள 97 பேர் வரவில்லை.
செல்லிடப்பேசி, மடிக்கணினி, கால்குலேட்டர் போன்ற பொருள்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனை செய்த பிறகே தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந. மாரிமுத்து மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். தேர்வையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பட்டதாரி ஆசிரியர்களுக்காக 2 ஆம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com