டிச.9 இல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் டிச.9,10 ஆகிய தேதிகளில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறன.

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் டிச.9,10 ஆகிய தேதிகளில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
2017-2018 ஆம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான தடகளம், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, மேசைப் பந்து,கபடி,சிறகுப் பந்து,கால்பந்து, கையுந்துப் பந்து மற்றும் குழு விளையாட்டு உள்ளிட்ட
போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் டிச. 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
போட்டிகளில் பங்கேற்போர் 31.12.2017 அன்று 21 வயது பூர்த்தி அடையாதவர்களாக இருத்தல் வேண்டும். 21 வயது பூர்த்தியானவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க  அனுமதிக்கப்படமாட்டார்கள் (1.1.1997)
அன்றோ அல்லது அதற்கு பின்னரோ  பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தடகளம், நீச்சல் விளையாட்டுகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டும் மாநில போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 
மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்க்கான பிறப்பிடச் சான்றிதழ் அல்லது இருப்பிடச் சான்றிதழ் மற்றும்
வயது சான்றிதழ் ஆகியவற்றை  மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் போட்டி நடைபெறும் நாளன்று சமர்ப்பிக்க வேண்டும்.
சொந்த மாவட்டத்திற்காகவோ பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாவட்டத்திற்காகவோ விளையாட அனுமதிக்கப்படுவர். அதற்குரிய ஆதாரங்கள் மாவட்ட விளையாட்டு
மற்றும் இளைஞர் நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடத்தைப் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தலா ரூ. 1000, ரூ. 750, ரூ. 500-க்கான பரிசுத்தொகை
வழங்கப்படவுள்ளது.
ஆகவே,போட்டியில் பங்கேற்போர் அவர்களின் வங்கிக்கணக்கு புத்தக நகலை போட்டி நடைபெறும் நாளன்று சமர்ப்பிக்க வேண்டும். 
மாநில அளவிலான முதல்வர் கோப்பை தடகள மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு கண்டிப்பாக ஊக்க மருந்து சோதனை நடத்தப்படவுள்ளது. மேலும்,
விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703499 என்ற எண்ணிலும், ஹாக்கி பயிற்றுநர் ந. லெனினை 9443561313 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com