பசுமைப்படை , சுற்றுச்சூழல்  மன்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை,பள்ளிக் கல்வி துறை சார்பில் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை,பள்ளிக் கல்வி துறை சார்பில் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் டி. கலைமதி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். 
தஞ்சாவூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர், உடையார்பாளையம் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,பள்ளித் துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர்
பங்கேற்று 250 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
 பயிற்சியில்  பள்ளியில் மர வகைகள் பராமரிப்பு அவசியம் குறித்தும், தூய்மையான காற்று கிடைக்க என்ன வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என விளக்கப்பட்டது.
மேலும் இப்பயிற்சியில் திடப் பொருள்,பிளாஸ்டிக் பொருளால் ஏற்படும் விளைவுகள், மாணவர்கள் தன்னார்வமாக மரம்,செடிகள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். அரியலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ம. குணபாலினி வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல்
அலுவலர் கொளஞ்சிநாதன் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com