பொய்யாதநல்லூர் கிராமத்தில் உலக மண்வள தின விழா

அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் உலக மண்வள தின விழா அண்மையில் நடைபெற்றது.

அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் உலக மண்வள தின விழா அண்மையில் நடைபெற்றது.
 விழாவுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அய்யாசாமி தலைமை வகித்து,விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கினார். அரியலூர் வட்டார வேளாண் துணை இயக்குநர்(பொ) ரா.பழனிசாமி பங்கேற்று, இயற்கை விவசாயம் மூலம் மண்வள பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். வட்டார வேளாண் அலுவலர் அ.சவிதா வளமான மண்ணின் இயல்புகள் பற்றி பேசினார். 
அரியலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சி.பாஸ்கரன், மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் மண்வள அட்டையில் உள்ள உரப்பரிந்துரைகளை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் எவ்வாறு உரமிடுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com