வளர்ச்சி திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி,துணிநூல் மற்றும்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி,துணிநூல் மற்றும் கதர் துறையின் முதன்மைச் செயலருமான மு.பணீந்திர ரெட்டி புதன்கிழமை  ஆய்வு செய்தார்.
ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள உயிரியல், வேதியியல் ஆய்வகங்களை ஆய்வு செய்த அவர், 
அங்கு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
  பின்னர், செங்குந்தபுரம் ஸ்ரீ சுந்தர விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை ஆய்வு செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பலவிதமான பட்டுப் புடவைகள், வேட்டி, சேலைகளை பார்வையிட்டு, நிகழாண்டு விற்பனை விவரத்தை கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சென்ற அவர், அங்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த விளைபொருள்களை பார்வையிட்டார்.
மேலும்,செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, நோயாளிகளின் வருகைப் பதிவேடு மற்றும் சிகிச்சை விவரங்களை பணீந்திர ரெட்டி கேட்டறிந்தார்.
அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சுழற்கலப்பைகள், மினி டிராக்டர் போன்ற வேளாண் கருவிகளின் செயல்பாடுகளையும், நீடித்த நிலையான மானாவாரி நில வேளாண்மை குறித்தும், அதன் பயன்களையும் விவசாயிகளிடமும், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு  வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் பிரிவினை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும், போதிய அளவில் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் இருப்பில் உள்ளதா எனவும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஸ்வரி, கோட்டாட்சியர்கள்
 மோகனராஜன், டினாகுமாரி, வேளாண் இணை இயக்குநர் எஸ்.அய்யாசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, கைத்தறி உதவி இயக்குநர் ஜி.திருவாசகர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டாட்சியர்கள் சு.முத்துலட்சுமி, வேல்முருகன், உமாசங்கரி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com