விவசாயிகளுக்கு தரமற்ற விதை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை

விவசாயிகளிடம் தரமற்ற விதை விநியோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன் தெரிவித்தார்.

விவசாயிகளிடம் தரமற்ற விதை விநியோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
அரியலூர் மாவட்டத்தில் நடப்பு சித்திரை மற்றும் தைப் பட்டத்துக்குத் தேவையான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும். விதையின் ரகம், நிலை,குவியல் எண், காலாவதி நாள் மற்றும் அளவு சரியாக உள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும்.  விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்கும் விதைகளின் விவரங்களுடன் விவசாயிகளின் கையொப்பம் பெற்று விதை விற்பனையாளரும் கையொப்பமிட்டு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். 
இதில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் விதை விற்பனையாளரின் மீது விதைச் சட்ட நடைமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் விதை வாங்கிய ரசீதை பாதுகாப்பாக பயிர் அறுவடை முடியும் வரை வைத்திருக்க வேண்டும்.
உரிமம் பெறாமல் விதை விற்றாலோ,ரசீது தர மறுத்தாலோ விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்துக்கு  0431 - 2420587 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com