மாட்டுவண்டி, டிராக்டர்களில் ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் வரும் டிச.20-க்குள் ஒளிரும் பட்டை பொறுத்த வேண்டும் என

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் வரும் டிச.20-க்குள் ஒளிரும் பட்டை பொறுத்த வேண்டும் என உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள மாட்டுவண்டி ஓட்டுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசியது:
அரியலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிகளால் விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க அனைத்து மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் சிவப்பு மற்றும் வெள்ளைநிற ஒளிரும் பட்டைகளை வரும் டிச.20-க்குள் பொறுத்த வேண்டும், அதற்கு பிறகு ஒளிரும் பட்டை பொறுத்தாமல் வண்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
பெரும்பாலான விபத்துகள் இரவு நேரத்திலேயே நிகழ்கின்றன. இதனால் இரவுகளில் மாட்டுவண்டிகள் செல்ல பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே மாட்டுவண்டிகள் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படும். தொடர்ச்சியாக 2 வண்டிகள் மட்டுமே செல்ல வேண்டும். கூட்டத்தில் மாட்டு வண்டி ஓட்டுவோர் தற்போது அரியலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தஞ்சை, கடலூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அதிக நேரம் பயணிப்பதாலேயே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் உடையார்பாளையம் கோட்டத்தில் செந்துறை வட்டத்தில் 3 இடங்களிலும் ஜயங்கொண்டம் வட்டத்தில் 3 இடங்களிலும் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள குவாரிகளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளது. நீதிமன்ற உத்தரவால் அது தாமதப்படுகிறது. எனவே விரைவாக மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
கூட்டத்தில் ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, வட்டாட்சியர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com