ஆலந்துறையார் கோயிலுக்கு செயல்அலுவலரை நியமிக்க கோரிக்கை
By DIN | Published on : 17th July 2017 09:38 AM | அ+அ அ- |
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள ஆலந்துறையார் கோயிலுக்கு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூர் அருகே கீழப்பழுவூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு அருந்தவநாயகி உடனாய அருள்மிகு ஆலந்துறையார் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலுக்கு நூறு ஏக்கருக்கு நிலங்கள் உள்ளன. ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும்,அதனை நிர்வாகிக்க செயல் அலுவலர் மற்றும் கணக்காளர் இல்லை.
இதனால் சொத்துக்கள் மூலம் சரிவர வருமானம் ஈட்ட முடியாமல் விஷேச காலங்களில் சுவாமி புறப்பாடு இல்லாமல் இருக்கிறது. மேலும் கோயிலில் 6 கால பூஜைகள், ஏனைய பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை.
எனவே, இதை சீர்படுத்தும் பொருட்டு இந்த கோயிலுக்கு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.