மாநில அளவிலான ஹாக்கி போட்டி:  திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் பள்ளி சாம்பியன்

அரியலூரில் தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட  மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அரியலூரில் தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட  மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் திண்டுக்கல் செயின்ட்மேரிஸ் பள்ளி அணி முதலிடத்தையும், மதுரை திருநகர் இந்திராகாந்தி மெமோரியல் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும், மான்ட்போர்ட் பள்ளி அணி 3 மற்றும் 4 ஆம் இடத்தையும் வென்றது,.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ,  டால்மியா சிமென்ட் ஆலை கனிமவள துணைப் பொது மேலாளர் வாசுதேவன், ஆர்டிசி குழுமத்தின் தலைவர் அக்பர்ஷெரிப்,  அரியலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் நந்தகுமார், ஆகியோர் பங்கேற்று வெற்றிப் பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பையையும், சான்றிதழ்களையும் வழங்கினர். ஏற்பாடுகளை  பள்ளியின் துணை முதல்வர் அமல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com