காலதாமதமாக பேருந்து வருகை: தா.பழூரில் கல்லூரி மாணவர்கள் மறியல்

தா.பழூர் பகுதியில் காலை 7 மணிக்கு வர வேண்டிய அரசுப் பேருந்து காலதாமதமாக வருவதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கல்லூரி

தா.பழூர் பகுதியில் காலை 7 மணிக்கு வர வேண்டிய அரசுப் பேருந்து காலதாமதமாக வருவதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியலூர் மாவட்டம்,  தா. பழூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான அண்ணகாரன்பேட்டை, இடங்கண்ணி, அடிக்காமலை, தாதம்பேட்டை, கோடங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் கும்பகோணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜயங்கொண்டத்தில் இருந்து  தா.பழூர் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. இதனால் தா.பழூர் பகுதியில் இருந்து கும்பகோணம் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. கல்லூரி நேரத்திற்கு முறையாக பேருந்து இயக்கக் கோரி 2 முறை  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வரவேண்டிய அரசுப் பேருந்து 8 மணியாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தா.பழூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போக்குவரத்துக் கழக மேலாளரிடம் பேசி முறையாக பேருந்து இயக்க நடவிடக்கை எடுப்பதாக  கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com