பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

இடர்பாடுகள் மூலம் பயிர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வரவேண்டுமென திருமானூர் வட்டார

இடர்பாடுகள் மூலம் பயிர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வரவேண்டுமென திருமானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்(பொ)ஆ.சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தற்போது நிலவி வரும் இயற்கை இடர்பாடுகள் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுவதில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும்,  பயிர்களுக்கு சேதம் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குவதற்கும் பிரதமரின் புதிய பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ. 368 பிரீமியமாக செலுத்தினால் ரூ.18,400 பயிர்காப்பீட்டுத் தொகையாகவும், பருத்திக்கு ரூ.1,128 பிரீமியமாக செலுத்தினால் இடர்பாடுகளில் சேதம் ஏற்படும் போது ஏக்கருக்கு ரூ.22,550 காப்பீட்டுத் தொகையாகவும் பெறலாம்.
இதே போல் நெல், உளுந்து மற்றும் கடலை போன்ற பயிர்களுக்கும் பயிர்காப்பீடு வழங்கப்படுகிறது.எனவே, நெல் பயிருக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளும், அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள்ளும் காப்பீட்டு பிரீமியத்தொகையை செலுத்த வேண்டும்.காலக்கெடு முடிவதற்குள் விவசாயிகள் பிரிமீயத் தொகையினை வங்கி வரைவோலையாக அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பத்தை அளித்து பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com