அரியலூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் உள்ள டி.ஏ.பி திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கும்பகோணம் சரகம் சார்பில் கைத்தறி சிறப்பு கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் உள்ள டி.ஏ.பி திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கும்பகோணம் சரகம் சார்பில் கைத்தறி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.
ஆட்சியர் க.லட்சுமிபிரியா குத்து வி ளக்கேற்றி, கண்காட்சியின் முதல் விற்பனையை தெ'ôடக்கி வைத்தார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டு சேலை ரகங்கள் மற்றும் வேட்டி, துண்டு மற்றும் துணிகளின் விலை மற்றும் தரம் குறித்து அலுவலர்கள், பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் எம்.ராஜேந்திரன், திருபுவனம் பட்டு துணை இயக்குநர் பெரியசாமி, கைத்தறி அலுவலர் கே. மோகன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் டி. கோவிந்தசாமி, நெசவாளர் சங்க இயக்குநர் ராஜலட்சுமிசுந்தரேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை இந்த கண்காட்சியில் அரசு தள்ளுபடியில் துணிகள் வாங்கி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com