கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி வெற்றியூரில் மாணவர்கள் சாலை மறியல்

அரசுப் பேருந்துகள் அனைத்திலும் பள்ளி மாணவ,  மாணவிகளை ஏற்றிச் செல்ல வலியுறுத்தியும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை

அரசுப் பேருந்துகள் அனைத்திலும் பள்ளி மாணவ,  மாணவிகளை ஏற்றிச் செல்ல வலியுறுத்தியும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெற்றியூரில் பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலவச பேருந்து அட்டைகள் வைத்துள்ள பள்ளி மாணவ, மாணவிகளை, அரியலூர் - தஞ்சை வழித்தடத்தில் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் ஏற்றுவதில்லை. அப்படியே விரைவுப்  பேருந்து என்று தெரியாமல் பள்ளி மாணவ, மாணவிகள் ஏறினால், கீழே இறங்கச் சொல்லாமல் பேருந்துக்கான கட்டணத்தை செலுத்துமாறு நடத்துநர்கள் வலியுறுத்துகின்றனர். சில நேரங்களில் மாணவர்களை நடத்துநர்கள் தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.
இதை கண்டித்தும், திருமானூர் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாணவ, மாணவிகளை ஏற்ற வேண்டும். பள்ளி நேரங்களில் மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கி, அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரது தெரிவித்து பெற்றோர்கள், சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.
அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ் மற்றும் கீழப்பழுவூர் போலீஸார், கிளை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவுப் பேருந்துகளில் இலவச பேருந்துப் பயண அட்டை உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த சாலை மறியலால் அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com