மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி மனு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் பகுதிக்கு உள்பட்ட வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மூலம் மணல் அள்ளுவதற்கு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் பகுதிக்கு உள்பட்ட வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமி பிரியாவிடம், மாட்டு வண்டி விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனு:
செந்துறை வட்டம், தளவாய் பகுதிக்கு உள்பட்ட வெள்ளாற்றில் பொதுப் பணித்துறை சார்பில் மணல் குவாரி அமைத்து, அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து,அங்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.
இதனால் அப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
மேலும் ஏழை, எளிய மக்கள் கட்டும் தொகுப்பு  வீடுகளுக்கும், காங்கீரிட் வீடுகளுக்கும் மணல் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com