இலுப்பையூரில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தில் நீடித்த நிலையான நில வேளாண்மை இயக்கத் திட்ட சார்பில் மானாவாரி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தில் நீடித்த நிலையான நில வேளாண்மை இயக்கத் திட்ட சார்பில் மானாவாரி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் சி. பாஸ்கரன் தலைமை வகித்தார்.
வேளாண் அலுவலர் அ. சவீதா, மானாவாரி நில மேலாண்மை இயக்கம், கோடைஉழவு, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு, ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி முறைகள், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
கீரிடு வேளாண் அறிவியியல் மைய விஞ்ஞானி எம். சரவணன்,  பருத்தி, மக்காச்சோளம் சாகுபடிமுறைகள் குறித்தும், வேளாண் உதவி அலுவலர் பி. இளங்கோவன், உழவர் மன்ற அமைப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
முடிவில் இலுப்பையூர் மானாவாரி பகுதி நீடித்த நிலையான மானாவாரி நில மேலாண்மை இயக்கத் தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் மு. கொளஞ்சி மற்றும் அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் இரா. வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com