செந்துறையில் 26 பேருக்கு இலவச தையல் இயந்திரம்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே புதுவாழ்வு திட்டம் சார்பில் 26 பேருக்கு இலவச தையல் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே புதுவாழ்வு திட்டம் சார்பில் 26 பேருக்கு இலவச தையல் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
புதுவாழ்வு திட்டம் மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டம் சார்பில் கிராமங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு, தி.ரைஸ் எம்.கே. பயிற்சி நிறுவனத்தில் தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை இந்த பயிற்சி முடித்த 26 பேருக்கு சான்றிதழ்களும், இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், செந்துறை புதுவாழ்வு திட்ட அணித் தலைவர் குமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் கவிதா, பாலமுருகன், தி ரைஸ் எம்.கே.வி பயிற்சி நிறுவனர் பன்னீர் மற்றும் கொசமற்றம் பைனான்ஸ் மேலாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி ஆசிரியை மங்கையர்க்கரசி வரவேற்றார். நிறைவில் ஆசிரியை ரம்யா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com