செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் ஏப்.1-ல் பங்குனிஉத்திர திருவிழா தொடக்கம்

ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மார்ச் 31 ஆம் மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள்

ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மார்ச் 31 ஆம் மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, ஏப். 1 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரவிழா தொடங்குகிறது.
தொடரும் விழா நாள்களில் நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். விழாவின் 7 ஆம் நாளான ஏப். 7 ஆம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 8 ஆம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப். 9 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, திருக்கோயில் செயல் அலுவலர் ப. கெளதமன், தக்கார் பி. ஜெயதேவி தலைமையிலான கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com