'பட்டம் பெறும் மாணவர்கள் சமுதாயம் முன்னேற சேவைபுரிய வேண்டும்'

பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சேவை புரிய வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், குரும்பலூரில் உள்ள

பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சேவை புரிய வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று 1,142 மாணவ-, மாணவிகளுக்கு பட்டம் அளித்து, ஆட்சியர் மேலும் பேசியது:
இந்தக் கல்லூரிக்குத் தேவையான வசதிகளை எப்போது கேட்டாலும், முன்னுரிமை அளித்து செய்து வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கல்லூரியில் படித்து பட்டம் பெறும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள். இவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இச்சமுதாயம் பல்வேறு வகையான உதவிகளை செய்துள்ளது. எனவே, பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் அனைவரும் அவற்றை ஈடுசெய்யும் வகையில், இச்சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தாங்கள் பெற்ற கல்வி மூலம் சேவையாற்ற வேண்டும்.
வருங்காலத்தில் இளைஞர்கள் அரசுத்துறைகளில் பணியாற்றி பெரம்பலூர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். அதற்கு, மாணவர்களின் இலக்கு உயர்வானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். இலக்கை அடைவதில் உறுதியாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர் நந்தகுமார்.
விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் ந. ராசாராமன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com