மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இருபாலாருக்கும் தடகளம், நீச்சல், குழுப்போட்டிகளான இறகுப்பந்து,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இருபாலாருக்கும் தடகளம், நீச்சல், குழுப்போட்டிகளான இறகுப்பந்து, டேக்வாண்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், 15 பள்ளிகள், 7 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 170 ஆண்களும், 160 பெண்களும் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சி.ஆர். விபின்ராஜ், 400 மீ ஓட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் எஸ். அசோந்த், நீளம் தாண்டுதலில் சீனிவாசன் கல்லூரி மாணவர் ஆர். அகிலன், உயரம் தாண்டுதலில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி. நிர்மல்ராஜ், ஈட்டி எறிதலில் பெரம்பலூர் மின் வாரியத்தைச் சேர்ந்த ஆர். பிரகாஷ், வட்டு எறிதலில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் எஸ். ஆனந்தராஜ், 1,500 மீட்டர் ஓட்டத்தில் பொம்மனப்பாடியைச் சேர்ந்த அ. மாரிமுத்து ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்களுக்கான தடகளத்தில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பி. பிரியதர்ஷினி 100 மீ ஓட்டம், ஒய். டெல்சி 400 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல் போட்டியில் என். நாகப்பிரியா, வட்டு எறிதல் போட்டியில் எஸ். கார்குழலி, ஈட்டி எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் என். நாகப்பிரியா, 1,500 மீ ஓட்டத்தில் எம். தன்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
டேக்வாண்டோ (ஆண்கள்): ஜி. அஸ்வந்த் (23 கிலோ எடைப் பிரிவு), எம். நிரஞ்சன் (25 கிலோ), ஆர். மணிகண்டன் (27 கிலோ), எஸ். பிரபு (30 கிலோ), வி. அச்சுதன் (35 கிலோ), 35 கிலோவிற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் கே. மணிரத்தினம், எப். வின்சென்ட் பெர்னான்டோ (48 கிலோ), வி. ராமஜெயம் (54 கிலோ), கே.எஸ். விக்னேஸ்வரன் (60 கிலோ), பி. தேவநாதன் (70 கிலோ) ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
டேக்வாண்டோ (பெண்கள்): இ. இளவரசி (45 கிலோ எடைப்பிரிவு), எஸ். ஸ்ரீநிதி (60 கிலோ), இ. சிந்துஜா (41 கிலோ), பி. யோகலட்சுமி (44 கிலோ), வி. பிரகஸ்னி (25 கிலோ), வயது வரம்பற்ற 35 கிலோ எடைப்பிரிவில் ஜே. ஜெயபியூலா ùஸரீன், 38 கிலோ எடைப்பிரிவில் ஜே.கே. செந்தமிழ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ. கார்த்திக்.
தடகளப் பயிற்றுநர் க. கோகிலா வரவேற்றார். நீச்சல் பயிற்றுநர் ந. அன்பரசு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com