விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில விரும்பும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணிய

விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில விரும்பும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு உரிய பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கும், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9, 11 ஆகிய வகுப்பு சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ் ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ உள்ளிட்ட விளையாட்டுப் பிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞநர் நலன் அலுவலரை அணுகி இலவசமாக பெற்று, பூர்த்தி செய்து ஏப். 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2017- 2018 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விளையாட்டு விடுதி சம்பந்தப்பட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com