மண்டல ஹாக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருச்சி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் வென்ற அணிகளுக்கு சனிக்கிழமை மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருச்சி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் வென்ற அணிகளுக்கு சனிக்கிழமை மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.
2016-17 ஆண்டிற்கான திருச்சி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளில், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் , பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஹாக்கி அணிகள் கலந்து கொண்டன.
முதல் போட்டியில் திருவாரூர் அணியும், தஞ்சையும் அணியும் மோதின. இதில் 5-5 என்று கோல்கள் அடிக்கப்பட்டதால், போட்டி டிராவானது. இரண்டாவது போட்டியில்  அரியலூர் மாவட்ட அணி பெரம்பலூர் மாவட்ட அணியினை 21-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
25 ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட அணி, தஞ்சாவூர் மாவட்ட அணியினை 19-0 என்ற கோல் கணக்கிலும்,  இரண்டாவது போட்டியில் அரியலூர் மாவட்ட அணி திருவாரூர் மாவட்ட அணியினை 7-0 என்ற கோல் கணக்கிலும், மூன்றாவது போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி திருவாரூர் மாவட்ட அணியினை 18-1 என்ற கோல் கணக்கிலும்,   நான்காவது போட்டியில் அரியலூர் மாவட்ட அணி தஞ்சாவூர் மாவட்ட அணியினை 1-0 என்ற கோல் கணக்கிலும் வென்றன.
மண்டல அளவிலான லீக் போட்டிகளில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இறுதி போட்டிகளில் 9  புள்ளிகள் பெற்று அரியலூர் மாவட்ட ஹாக்கி அணி  முதலிடத்தையும்,  7 புள்ளிகள் பெற்று  தஞ்சாவூர் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றது. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றது.
மாலையில் நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் க.ரகுநாதன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் வீ.யோகநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக, ஹாக்கி பயிற்றுநர் ந.லெனின் வரவேற்றார். கைப்பந்து பயிற்றுநர் ஆர். ஹரிகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com