ஓட்டக்கோவில், இலுப்பையூரில் விவசாயிகள் குழுக் கூட்டம்

அரியலூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாடு திட்டத்தின் மூலம் தலா 1000 ஹெக்டர் வீதம் 200 ஹெக்டர் நிலம் தேர்வு

அரியலூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாடு திட்டத்தின் மூலம் தலா 1000 ஹெக்டர் வீதம் 200 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓட்டகோவில், இலுப்பையூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) சி. பாஸ்கரன் தலைமை வகித்து பேசினர். மானாவாரி நில மேம்பாடு குழு உறுப்பினர்கள் வேளாண் அலுவலர் அ. சவீதா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நெடுமாறன், கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் மேற்கண்ட திட்டத்தின் நோக்கம், செயல்பாடு மற்றும் அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பயிர் சாகுபடி திட்ட அறிக்கை மற்றம் விதைத் தேவைகள் பற்றிய விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கோடை உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சமுதாய குட்டை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் கொளஞ்சி, இளங்கோவன், வேளாண் வணிகத் துறை உதவி மேலாளர் மேகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com