வருவாய் தீர்வாயங்களில் 446 மனுக்களுக்கு தீர்வு

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களிலும் புதன்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் 446 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களிலும் புதன்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் 446 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
உடையார்பாளையம் வட்டத்துக்குட்பட்ட ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் தலைமை வகித்தார். இதில் 283 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 75 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. 172 மனுக்கள் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டன. 36 மனுக்கள் தள்ளுபடியாகின.
அரியலூர் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன்  தலைமை வகித்தார். இதில் 422 மனுக்கள் பெறப்பட்டு, 258 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. 91 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 73 மனுக்கள் தள்ளுபடியாகின.
செந்துறை வட்டாட்சியரகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 271 மனுக்கள் பெறப்பட்டு, 127 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. 116 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 28 மனுக்கள் தள்ளுபடியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com