செந்துறையில் காலாவதி பொருள்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளில் காலாவதி மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினர்

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளில் காலாவதி மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
செந்துறை பேருந்து நிலையம், கடைவீதி, ஜயங்கொண்டம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, சக்திவேல், கோவிந்தசாமி, அருள்மணி, மணிகண்டன் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வில், காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், ஆட்டா, மைதா மாவு, கோதுமை ரவா, வனஸ்பதி, குளிர்பானங்கள், கலப்பட டீத்தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை போன்ற பொருள்களை கைப்பற்றி அழித்தனர். மேலும், சந்தேகப்படும்படியாக இருந்த சாக்லெட் உணவு மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். செந்துறை பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், வணிகர்கள் தரமான பொருள்களை வாங்கி விற்பனை செய்யவும், வாங்கும் நுகர்வோர் பொருள்களின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கி பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com